இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்த தாய்
இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்த தாய்
அநுராதபுரம் – கெப்பத்திகொல்லாவ பகுதியில் தாயொருவர் விசேட தேவையுடைய இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விசேட தேவையுடைய 21 வயது, 9 வயது மகன்களுடன் 48 வயதுடைய தாய் ஒருவரே கிணற்றில் பாய்ந்துள்ளார்.இதன்போது தாய் மற்றும் 9 வயது மகன் ஆகியோர் உயிருடனும் விசேட தேவையுடைய மகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
உயிருடன் மீட்கப்பட்ட இருவரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தற்கொலைக்கு முயற்சித்தஇ தாய் பிள்ளைகள் இருவரையும் மருத்துவ சிகிச்சைக்குட்படுத்த முடியாமை மற்றும் வறுமை நிலைக்காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
குறித்த தாயின் கணவர் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிறுவனத்தில் கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்