பண்ணைகளுக்குள் நீதி மன்ற உத்தரவின்றி அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம்

பண்ணைகளுக்குள் நீதி மன்ற உத்தரவின்றி அதிகாரிகளை அனுமதிக்க வேண்டாம்

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நீதி மன்ற உத்தரவின்றி கோழிப்பண்ணைகளை சோதனையிட வருகைத்தரும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளை பண்ணைகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் வர்த்தகர்களை இலக்கு வைத்து ஹல்மில்லவௌ, அவுலேகம, மேலும் கும்புக்வெல, மற்றும் கொபெயிகனே ஆகிய பகுதிகளில் நுகர்வோர் அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தார்கள் என தெரிவித்து நான்கு கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கோழிகளிடையே பரவி வரும் தொற்றானது தற்போது நூற்றுக்கு 40 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்