Last updated on April 11th, 2023 at 07:30 pm

ரயில் சேவைகள் இரத்து

ரயில் சேவைகள் இரத்து

ரயில் சேவைகள் இரத்து

60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒரு வருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததன் காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வு அளிக்கும் அரசின் கொள்கை முடிவுடன் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சசு அறிவித்துள்ளது.

குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாததால், கடந்த சில தினங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20க்கும் அதிகமான ரயில் சாரதிகள் தமது சேவையை நிறைவு செய்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பதுளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தபடும் தொடரூந்து சேவைகள் சில தடைப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்