காத்தான்குடியில் பெண்கள் காப்பகம் திறந்து வைப்பு
காத்தான்குடியில் அமைந்துள்ள முதியோர் காப்பக இல்ல வளாகத்தில் அமைந்துள்ள பெண்கள் காப்பக கட்டிட திறப்பு விழாவானது காப்பக தலைவியும், காத்தானகுடி நகரசபை உறுப்பினருமாள சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா இக்கட்டிடத்தை திறந்து வைத்தார். ஓமான் முன்னாள் தூதுவர் அல்ஹாஜ் ஓ.எல்.அமீர் அஜ்வத், அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்சூர், அஷ்ஷெய்க் நஜ்மான், Rainco உரிமையாளர் எம்.பெஸஸ் ஹாஜியார், கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் பொருளாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஜெஸீமா முஸ்தபா, வெளிவிவகாரப் பணிப்பாளர்களுள் ஒருவரான இமாஸா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.ஜீ.எம்.அஜ்வத், பணிப்பாளர் சபை உறுப்பினரும் ஹுஸைனியா பள்ளிவாயல் தலைவருமான எஸ்.எம்.சமீல், காத்தான்குடி அல்-அக்ஸா பள்ளிவாயலின் பிரதம இமாம் மௌலவி ஆதம்லெப்பை பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னான் தலைவர் எம்.ஐ.ஆதம்லெப்பை பலாஹி, காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் இணைச் செயலாளர்களான காத்தான்குடி இக்ரஃ வித்தியாலய ஆசிரியை சிபானா அரபாத், காத்தான்குடி மத்திய கல்லூரிய ஆசிரியை ஹில்மியா முபீன் மற்றும் பல முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி பிதேச்தில் பாதிக்கப்பட்டு, கைவிடப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் வயோதிபப் பெண்களுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு தனவந்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் கடந்த நான்கு வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்