லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பில் புதிய அறிவிப்பு

இம்மாத சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்யவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும், ஆனால் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது*என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்