உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மஹியங்கன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலுகாடியா பகுதியில் நபர் ஒருவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்து இருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து தேடுதலை மேற்கொண்ட போது மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் அலுகாடியா மாபகாதேவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரும் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

&nbspமேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

;