மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய நியமனங்கள்
-பதுளை நிருபர்-
மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய நியமனங்கள்
மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும்,ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய நியமனங்கள்.
ஜனாதிபதி செயலகத்தின் மலையக கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய மாகாண சபையின் முன்னாள் தலைவர் துரை மதியுகராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்