அரச குடும்ப நல சுகாதாரஉத்தியோகததர் சங்கம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவசியமான மருந்துகள், இரண்டு மாதங்களுக்கு போதிய அளவில் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையிலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் தேவையான அளவு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்