பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வெலிபன்ன மற்றும் குருந்துகஹா ஆகிய இடங்களில் 4 பேருந்துகள் கைப்பற்றப்பட்டதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதாக கூறி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்