ஊடகங்களை புறக்கணித்த அரச அதிபர்

-யாழ் நிருபர்-

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்காது புறக்கணித்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக ஊடகவியலாளர்களை உள்வருமாறு அழைத்தார்.

இந் நிலையில் கடந்த காலங்களில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது வழமை ஆனால் தற்போதைய அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், ஊடகங்களை அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் எனக்கு முன்கூட்டியே தெரியாது தெரிந்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பேன்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நான் தான் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பில் நான் தான் முடிவு எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்