4 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு : வெளிநோயாளர் பிரிவு பணிகள் பாதிப்பு

கறுப்பு பட்டி மற்றும் கறுப்பு ஆடை அணிந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.

வரிக் கொள்கைக்கு எதிராகவும், மருந்துப் பற்றாக்குறைக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் கருப்பு பட்டி மற்றும் கறுப்பு ஆடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்களினால் அமுல்படுத்தப்பட்டுள்ள 4 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பணிகள் பாதிக்கப்பட்டன.

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் காலை 08.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள கனிஷ்ட பணியாளர்கள் ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் சங்கம், இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, தென் கொழும்பு போதனா வைத்தியசாலை, ராகம போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.