
கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை கட்டியது தமிழரசு கட்சி
-யாழ் நிருபர்-
உள்ளூராட்சி தேர்தலுக்காக, கிளிநொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் முகமாக இலங்கை தமிழரசு கட்சி இன்று புதன்கிழமை கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையின் செயலாளர் வீரபாகு விஜயகுமார் ஆகியோர் இன்று மதியம் கட்டுப் பணத்தை செலுத்தினர்.
மூன்று பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணத்தை முதலாவதாக தமிழரசு கட்சி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
