கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்

-மன்னார் நிருபர்-

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் உரிய நேரத்துக்கு கடற்படை மக்களை பயணிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நீண்ட நேரம் தலைமன்னார் கடல் கரை பகுதியில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் காத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக குழந்தைகள், வயோதிபர்கள் என பலர் காத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

கடற்படையினரின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக உரிய ஆவணங்களை காலையில் சமர்ப்பித்த போதும் அந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட போதும் கடலில் படகும் மூலம் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் நேரத்துடன் மக்களின் பதிவுகளை மேற்கொண்டு கச்சை தீவு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்று உரிய நேரத்திற்கு செல்வதற்கு அனுமதிக்காமையினால் நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு பல நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு அசெளகரிங்களுக்கு முகம் கொடுத்து வந்ததாக தெரியவருகின்றது.

கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்

கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்