திருகோணமலையில் இலவசமாக எண்ணெய் விநியோகம்
-திருகோணமலை நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் சீனத் தூதுவர் இணைந்து இலவசமாக எண்ணெய்யை விநியோகித்தனர்.
இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எரிபொருளை விநியோகிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் வியாழக்கிழமை திருகோணமலை குச்சவெளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு கியூ சென்கோங் மற்றும் கிழக்கு மாகாணத்தின் தலைமையில் இடம்பெற்றது.
சீன அரசாங்கம் வழங்கிய மொத்த எரிபொருளின் திருகோணமலை மாவட்ட விவசாய குடும்பங்களுக்கு 03 இலட்சம் லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில் விவசாயிகளுக்கு எரிபொருள் பெறுவதற்காக வழங்கப்பட்ட கூப்பன்களை சீனத் தூதுவர் மற்றும் ஆளுநர் ஆகியோர் விநியோகித்தனர்.
இதனையடுத்து ஆளுநரும் சீனத் தூதரும் பல விவசாயிகளுக்கு எரிவாயு நிலையத்தில் இருந்து எரிபொருளை பகிர்ந்தளித்தனர்.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, திருகோணமலை மாவட்ட செயலாளர் பீ.எச்.எம்.ஜயவர்தன, குச்சவெளி பிரதேச சபையின் தலைவர் எம்.முபாரக், பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்