சீனா வழங்கிய எரிபொருள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்

சீனா வழங்கிய எரிபொருள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளுக்கு நெற் பயிர்ச்செய்கைக்காக சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எரிபொருளை உடனடியாக விநியோகிக்குமாறு அதிகாரிகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் காரணமாக எரிபொருள் விநியோகம் தாமதமானது.இது தொடர்பில் விவசாய அமைச்சர்இ கனிய வள கூட்டுத்தாபனம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடினார்.

விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சீன அரசாங்கத்தினால் 6.98 மில்லியன் லீற்றர் டீசல் வழங்கியுள்ளது.

5 மாவட்டங்களை தவிர, ஏனைய அனைத்து மாவட்ட நெல் விவசாயிகளுக்கும் எரிபொருளுக்கான சீட்டுக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்