
மரண தண்டனை கைதி ஒருவர் உட்பட நான்கு கைதிகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இன்று திங்கட்கிழமை காலை ஆஜராகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்கள் சிங்கள மொழி மூலம் கலைப் பாடத்தில் பரீட்சை எழுதவுள்ளனர்.
இந்த நான்கு கைதிகளில் ஒருவர் மரண தண்டனை கைதி என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (கூடுதல்) சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும் வெளியில் இருந்து விண்ணப்பித்த பரீட்சார்த்தியாக சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் பரீட்சைக்கு முகம் கொடுக்க உள்ளார்.