நுவரெலியாவில் போராட்டம்
நுவரெலியாவில் நேற்று வியாழக்கிழமை இரவு போராட்டம்
புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தீ பந்தம் ஏந்திய போராட்டம் நேற்று இரவு நுவரெலியாவில்
நுவரெலியா – உடபுசல்லாவ பிரதான வீதியில் சிட்டி சந்தியின் தீ பந்தம் ஏந்திய படி இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்