சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள்
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனங்களை இந்த மாத இறுதிக்குள் உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஆணைக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதன் அடிப்படையில் புதிய ஆணைக்குழு உறுப்பினர்கள் இந்த மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழு, தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, தேசிய தணிக்கை சேவைகள் ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பவற்றுக்கான உறுப்பினர்களே நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்