IMF கடன் இந்த மாதம் கிடைக்கும் – தாரக பாலசூரிய
இந்த மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும் எனவும், எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தீர்வுகளை வழங்காமல் மக்களை வீதிக்குக் கொண்டு வருவதால் நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படாது எனவும், நாட்டை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இருந்து மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நேற்று வியாழன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்