நாட்டின் வட்டி வீதம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

தற்போது இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு இந்த சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை இன்று கூடவுள்ளது , கொள்கை வட்டி விகிதத்தை மாற்றமடையாமல் வைத்திருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடடின் தற்போது வைப்பு வீதம் 14.5 சதவீதமாகவும் கடன் வசதி விகிதம் 15.5 சதவீதமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்