உக்ரைன் ரஷ்யா போர் : சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது குறித்து தெரிவித்த அவர்,

உக்ரைனில் ரஷ்யாவில் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவளித்ததுடன், ரஷ்யாவுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகின்றது.

‘நான் சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி வாங் யியை பார்த்தபோது,  ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனர்கள் பரிசீலித்து வருகின்றனர் என்ற தகவல் குறித்து அவரிடம் எங்களின் கவலையை தெரிவித்தேன்.

இது இருதரப்பு உறவில் கடுமையான பிரச்சனையாக இருக்கும் என்றும், விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்