கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.

அதன்படி நாளை  சனி பிற்பகல் 2 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 2 மணி வரை நீர் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, நீர்வெட்டு காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முன்கூடியே நீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்