மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

மான் இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது.

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த பாலாகொல பகுதியில் நபர் ஒருவர் மானொன்றை வேட்டையாடியதாக 65 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

பசறை விசேட பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த விசேட பொலிஸ் பிரிவினர் விசேட அதிரடி படைகளுக்கு தகவலை வழங்கியதை அடுத்து உடன் ஸ்தானத்துக்கு விரைந்து சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வெட்டிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் 500 கிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

தனது வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி உயிரிழந்த மானை வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளதோடு மான் இறைச்சியையும் சந்தேக நபரையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்