சிலிண்டர்களை சுமந்துவராத மாணவரை தாக்கிய ஆசிரியர்
சிலிண்டர்களை சுமந்துவராத மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார்.
ஆசிரியர் ஒருவர் பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு மாணவரிடம் பணித்துள்ளார்.எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுப்பு தெரிவித்ததால் ஆசிரியரால் மாணவர் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியரை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர் தமது கட்டளையை நிறைவேற்றாமையினால் ஏற்பட்ட கோபத்தில் தாக்கியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டுள்ளதோடு, மாணவர் மீது வேறு எவ்வித கோபமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்