கிரீஸ் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு நேற்று புதன்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது.
லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்துள்ளது.
இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது
தொடர்புடைய செய்தி : ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 26 பேர் உயிரிழப்பு
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்