நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்
-அம்பாறை நிருபர்-
கல்முனை மாநகர சபை ஆணையாளர் மற்றும் கல்முனை தலைமையக பொறுப்பதிகாரி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளதாவது
கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி பாரிய அளவில் இடம்பெற்றுள்ளது.இந்நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இருந்த போதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து இன்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினோம்.இங்கு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகளை சுட்டிக்காட்டினோம்.இதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெளிவுபடுத்தினர்.இருந்த போதிலும் இவ்விடயத்தில் மேலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார்.இது தவிர கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக குற்றவாளிகளை இனம் கண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு ‘கல்முனையன்ஸ் போரம்’ ஆகிய நாங்கள் மாநகர ஆணையாளரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளோம்.
மேலும் இன்று வரை கைது செய்ய முடியாமல் கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவில் கடமையாற்றி இந்நிதிக்கையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் 02 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேவேளை குறித்த இருவரும் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறாயினும் இவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் நிதிகையாடல் சம்பவங்கள் தொடர்பில் ஆணையாளர் தலைமையில் நால்வர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றர்டன் அரசநிதி மோசடி செய்யப்பட்டுள்ளமையினால் அம்பாறையில் உள்ள விசேட குற்றப்புலனாய்வு பிரிவில் தொடர்ச்சியாக இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்