வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்கள் பிரிவுகள் இயங்கவில்லை : நோயாளர்கள் பாதிப்பு
-திருகோணமலை நிபுணர்-
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து வைத்தியசாலைகளின் வெளி நோயாளர்கள் பிரிவுகளும் இயங்கவில்லை. இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
மார்ச் 01 கருப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு 40 தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கு திருகோணமலை மாவட்டத்திலும் பூரண ஆதரவு வழங்கப்பட்டது.
அந்த வகையில் திருகோணமலை – மூதூர் நகரிலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்றன மூடப்பட்டிருந்தன.இதனால் சேவை பெற வருகைதந்தோர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை -கிண்ணியா தள வைத்தியசாலை-மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், மருந்து கலவையாளர்கள், எக்ஸ்ரே பிரிவினர் பணிபகிஷ்கரியில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்திய சேவை பெற வருகைதந்தோர் திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்தது. வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபட்டாலும் கையில் கருத்தப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் வைத்தியசாலையின் அவசர பிரிவு மாத்திரமே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்