சுவாமி விபுலானந்தர்
பிறப்பு
சாமித்தம்பி கண்ணம்மா தம்பதியினருக்கு 1892 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 27 ஆம் திகதி இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைதீவு எனும் ஊரில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் மயில்வாகனன்,ஆரம்ப கல்வியை கல்முனை மெதடிஸ் கல்லூரியில் கற்றார். மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியல் பின்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.1912 இல் கொழும்பு தொழில்நுட்ப கல்லூரியில் விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
தமிழ்ப் பணி
பழந்தமிழரின் இசைக்கருவியான யாழ் பற்றி சிறந்த ஆராய்ச்சி நூலாக போற்றப்படுகிற யாழ்நூல் என்று மிகச்சிறந்த இலக்கியத்தை இவர் படைத்திருக்கிறார். 14 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக இந்த நூல் கிடைத்தது.
அறிவியல் கல்வியானது தமிழில் போதிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்தது.இவர் அறிவியல் கலை சொல்லாக்கத்துக்காக உழைத்திருக்கின்றார்.
கல்விப் பணி
இவர் ஒரு தமிழ் ஆசிரியராக மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரியில் தனது கல்விப்பணியை துவங்கினார்.பின்பு கொழும்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
மதுரை தமிழ் சங்கம் நடாத்திய தேர்வில் சித்தி பெற்று பண்டிதர் பட்டம் பெற்றார். இலங்கையில் இருந்து இந்த பட்டத்தை பெற்றுக்கொண்ட முதல் நபர் இவராவார்.
துறவு வாழ்க்கை
யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளினுடைய பழக்கம் துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்தர் ஆக்கியது. இவர் துறவு பூண்டாலும் மக்களை விட்டு விலகவில்லை. சமூகத்தில் நிகழ்ந்த துன்பத்திலும் மகிழ்ச்சியிலும் பங்கெடுத்தவராவார்.
ஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலானந்தர் எனும் குரு பட்டத்தை இராமகிருஸ்ணரின் நேர் சீடரான சுவாமி சிவானந்தரிடம் இருந்து பெற்று கொண்டார். ‘பிரபோத சைதன்யர்’ என்ற பெயரையும் பெற்றார்.
எழுதியவை
இவர் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தெளிவாக கற்று அவற்றின் பெருமைகளை மக்களுக்கும் புரியும் படியாக தனது நூல்களிலும் கட்டுரைகளிலும் இவர் எழுதி இருந்தார்.
முத்தமிழை முதன்மைப்படுத்தி இவர் எழுதிய நூல்களும் ஆய்வுகளும் பெரும் புகழ் உடையனவாக காணப்படுகின்றன.
மகாககவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் அவரை முதன்மைப்படுத்தி தனது வாழ்வில் வாழ்ந்து காட்டினார்.
அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி கலாச்சாரத்தில் இருந்த வீழ்ச்சியில் இருந்த தமிழ் சமூகத்தை இவர் தட்டி எழுப்பினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்