ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 225 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்