சீனா மீது குற்றம் சுமத்தியுள்ள FBI

கொவிட்-19 வைரஸ் சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயின் தோற்றம் அநேகமாக ஒரு ஆய்வக சம்பவமாக இருக்கலாம் என்றும், FBI அதை சில காலமாக மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், ஆய்வக கசிவு குறித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளதுடன், இந்த குற்றச்சாட்டானது தம் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்றும் சீனா தெரிவித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்