சபையில் கொதித்தெழுந்த மணிவண்ணன்
-யாழ் நிருபர்-
சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு யாரும் வகுப்பெடுக்க வேண்டாம் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி மணிவண்ணன் சபையில் கடும் தொனியில் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகரசபையின் 2023 ம் ஆண்டு பாதீடு இன்று இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வரின் பெயர் வாசிக்கப்பட்ட போது அவர் எழுந்து நீதிமன்ற வழக்கிற்கு தடை ஏற்படாதவாறு இந்த அமர்வில் கலந்துகொண்டுள்ளேன் என தெரிவித்தார்.
அதன்போது இந்நாள் முதல்வர் ஆனோல்ட், நீங்கள் பாதீட்டிற்கு ஆதரவளிக்கிறீர்களா இல்லையா என கூறுங்கள் அதைவிடுத்து வேறு ஒன்றும் இங்கே பேச வேண்டாம் என கூறினார்.
இதன்போது கொதித்தெழுந்த முன்னாள் முதல்வர், சபை அமர்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை என கோபத்துடன் பதிலளித்து, தான் இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாகவும் கூறி அமர்ந்தார்