இளவயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் இளவயது திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வினை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அப்பகுதி இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

வளவாளராக தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மலர்விழி கலந்து கொண்டார்.

மேலும், தம்பலகாமம் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.டி.பாயிஸ் , இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.