மின் நிலையத்தில் பெருந்தொகை கம்பிகள் திருட்டு

மின் நிலையத்தில்  கம்பிகள் திருட்டு

சுமார் 19 இலட்சம் ரூபா பெறுமதியான செப்புக் கம்பி தலைமன்னார் – தம்பபவணி காற்றாலை மின் உற்பத்தி நிலைய களஞ்சியசாலையில் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சில இனந்தெரியாத குழுவினர் கடந்த 25 ஆம் திகதி இரவு இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதுடன்,

இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை மின்நிலைய அத்தியட்சகர் தலைமன்னார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத அதேவேளை, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்