ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் சமகால நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எண்மருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதோடு, குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அதனை எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்.