தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய அரச சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை முகாமைத்துவப்படுத்துவதற்காக விசேட தகைமைகளைக் கொண்ட நிதிய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவாரென அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பணியில் சேர்ந்த பிறகு, பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் 8 சதவீதமும், தொழில்தருநரின் பங்களிப்பில் 12 சதவீதமும் மாதந்தோறும் இந்த நிதியத்தில் வரவு வைக்கப்படும்.

அரச சேவை ஊழியர்கள் தமது சுயவிருப்பின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதிய முறைமையுடன் இணைந்து கொள்ளமுடியும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தேவையான ஏற்பாடுகளை இயற்றுவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்.