அம்பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை

அம்பலாங்கொட, குளிகொட – மீட்டியாகொட வீதியில் கொன்னடுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாதம்பகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியை பணிக்கு இறக்கிவிட்டு வீடு திரும்பும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய வாகனம் குறித்த விபரங்களை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.