மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி

சிறுமி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

4 வயது சிறுமி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

யாழ்.புத்தூர் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

மரண விசாரணைகளின் பின்னா் சிறுமியின் சடலம் பெற்றோாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்