கிழக்கு ஆளுநர் மட்டக்களப்பு சாய்பாபா வைத்தியசாலைக்கு விஜயம்

 

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் , ஸ்ரீ சத்தியசாயி கருனை நிலையம் அறக்கட்டளையின் கீழ் இந்தியாவில் இயங்கிவரும் மட்டக்களப்பில் உள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்சீவனி வைத்தியசாலையில் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக அண்மையில் விஜயம் மேற் கொண்டார்.

இந்தியாவின் சண்டகுரு ஸ்ரீ மதுசூதன் சாய் மற்றும் அவரது சீடர்கள் இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குகிறார்கள்.

இந்த மருத்துவமனை சிறு பிள்ளைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை உட்பட பல மதிப்புமிக்க பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் தற்போது இல்லாத இருதய வடிகுழாய் சிகிச்சை பிரிவு (cath lab) அடுத்த மாதத்திற்குள் நிறுவப்பட உள்ளது.

சத்யசாய் கருணை நிலையம் அறக்கட்டளை மூலம் நெதர்லாந்தில் இருந்து கொண்டு வரப்படும் என்கிறார் மருத்துவமனை டாக்டர் ரமேஷ் ராவ்.

தற்போது, இந்த அறக்கட்டளை இந்தியா, அமெரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய மருத்துவமனைகளை நிறுவியுள்ளது.

இதனை இலங்கை மருத்துவ சங்கம் அங்கீகரித்துள்ளது. கடந்த செப்டம்பரில் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையால் பரிந்துரைக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த நான்கு குழந்தைகள் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அந்த அறுவை சிகிச்சைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சத்திரசிகிச்சைகளை செய்வதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் 25 இலட்சம் ரூபா செலவாகும் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இதய வடிகுழாய் அலகு நிறுவப்பட்ட பின்னர், மேலும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள் நிறுவப்பட உள்ளன.

இதுதவிர, மருத்துவமனையைச் சுற்றியுள்ள தருமபுரம், கிரான் குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் இலவச உணவு வழங்கப்படுவதுடன், அப்பகுதி மக்களுக்கு இலவச மருந்து வழங்குவதற்காக வெளி நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

இதன்போது, வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பென்னி ஜயவர்தன, பிரதம வைத்திய அதிகாரி சிஷ்ரமிக்க பிரிகேடியர் ஏ.எஸ்.எம். பாரிஸ் உட்பட பலர் ககலந்து கொண்டனர்.