
நண்பருடன் நீராடச் சென்ற இளைஞன் பலி
நண்பருடன் நீராடச் சென்ற இளைஞன் பலி
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞன் நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிளந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீராடச் சென்ற இளைஞன் திடீரென கால்வாயில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன், இளைஞனைக் காணாததால், நுவரெலியா பொலிஸ் பிரிவின் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர், அதிகாரிகள் வந்து கால்வாயில் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்து இளைஞரின் சடலத்தை மீட்டனர்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்