
தூக்கிட்ட நிலையில் வங்கி பாதுகாவலர் ஒருவர் சடலமாக மீட்பு
வங்கி பாதுகாவலர் ஒருவர் சடலமாக மீட்பு
தம்பிலுவில் பிரதேசம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் வங்கியில் பாதுகாவலராக கடமையாற்றிவரும் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் வீ.சி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நாகமணி கணேசமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவை பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
– அத தெரண செய்திகள் –
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்
