
தீக்கிரையாகிய பல ஏக்கர் புற்தரை
தீக்கிரையாகிய புற்தரை
ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் உள்ள இந்த புற்தரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீ ஏற்பட்டுள்ளது.
தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது.
இந்த பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீப்பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களின் பெரும் முயற்சியின் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையம் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளது
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிலையத்தில் இருந்த நீரை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.எனினும் இந்த தீ மறுபுறம் பண்ணையின் புற்தரை வழியாக தொடர்ந்து பரவிய காரணத்தால் நிலையத்தின் செயற்பாடுகள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வழமைக்கு திரும்பின.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்
.
