ஆதரவற்றோர் இல்லத்தில் 11 சிறுமிகள் 60 வயதுடைய நபரால் துஷ்பிரயோகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் துஷ்பிரயோகம்

60 வயதுடைய நபர் ஒருவர் இரத்தினபுரி, ரக்வானவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கொடகவெல பிரதேச செயலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரத்தினபுரி பொலிஸார் கடந்த 24 ஆம் திகதி அவர் கைது செய்துள்ளனர்.

இவர் அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என்றும் இவர் சிறுவர் இல்லத்தினது பராமரிப்பாளர் ஒருவரின் கணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறப்படும் சிறுமியொருவர் குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.அவருக்கு 18 வயது பூர்த்தியானதன் பின்னர், குறித்த பராமரிப்பாளரின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலைக்கு சென்று வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அரச சார்பற்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தின் பராமரிப்பாளரான, சந்தேகநபரின் மனைவி பணியிலிருநது நீக்கப்பட்டுள்ளாரென தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்