ராகலையில் காணாமல் போன சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகிறார்

காணாமல் போன சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகிறார்.

ராகலை – சென்லெனாட்ஸ் மேற்பிரிவை சேர்ந்த, 10 வயதான குறித்த சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போன சிறுவன், தொடர்ந்தும் தேடப்படுவதாக, ராகலை பொலிஸார் தெரிவித்துள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி நேற்று வெளியே சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளார்.குறித்த சிறுவன் தரம் 4இல் கல்வி பயிலுகின்ற நிலையில் நேற்று மாலை 5 மணிமுதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்வதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்