இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா அட்டை
இலங்கை சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக சுற்றுலா அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தனியார் வங்கியொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த அட்டை மூலம், சுற்றுலாப் பயணிகள் நாட்டில் பொருட்களையும் சேவைகளையும் பாதுகாப்பாகப் பெற முடியும்.
மேலும், இந்த அட்டையானது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாத் துறையில் பல்வேறு சேவை வழங்குனர்களுக்கு உரிமையளிக்கிறது.
இந்த அட்டையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவர்கள் கொண்டு வரும் அந்நிய செலாவணியை வங்கிகளில் நேரடியாக மாற்ற முடியும்.