நிலத்தடி நீர் பாதுகாப்பானது இல்லை

இந்தியாவில் – சென்னையில் நிலத்தடி நீரின் தரம் குறித்து 45 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 25 இடங்களில் அளவிற்கு அதிகமான கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் இளங்கோ இது குறித்து கூறுகையில்,

நீண்ட கால அடிப்படையில் இந்த நீரை மக்கள் பருகினால் பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது, என்கிறார்.

அதிகமான தொழிற்சாலைகள் இருக்கக்கூடிய பகுதிளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என்பது இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும், குடிநீர் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாதுகாப்பானது. இருப்பினும் அந்த குடிநீர் வரக்கூடிய வழி, அதாவது குழாய் உடைப்பு, சாக்கடை நீர் கலந்து வருவதன் காரணமாகவே பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் போது அதன் தரம் குறைகிறது,  என்கிறார்.

இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர் தேவைக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் நீரை பயன்படுத்துவது இல்லை. போத்தல் குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் கூட வருமானத்தில் 12 சதவிகித தொகையை குடிநீர் போத்தல் வாங்க செலவிடுவதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாகி வந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசின் ஜல் ஜீவன் மீஷன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் குழாய் குடிநீர் பாதுகாப்பானது இல்லை, என தெரியவந்தது.