ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு செல்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, குறித்த முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்தது சென்ற பசறை விஷேட பொலிஸ் பிரிவினர் பதுளை பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு தகவலை வழங்கி அவர்களை வரவழைத்து பதுளை பசறை பிரதான வீதியில் வெவெஸ்த்த 7 ம் கட்டை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியை சோதனைக்கு உட்படுத்திய போது, முச்சக்கர வண்டியில் இருந்த நபரிடம் 6380 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், 39 வயதுடைய பதுளபிட்டி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.