“பொன் அணிகளின் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

-யாழ் நிருபர்-

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பக்றிஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரியின் மைதானத்தில் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணக் கல்லுரியின் அணித் தலைவராக ஐங்கரன் நிகர்லன், சென் பக்றிஸ் கல்லூரியின் அணித் தலைவராக சிவராசா கீர்த்தனன்   தலைமை தாங்கினர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணி களத்தடுப்பை தீர்மானிக்க சென் பக்றிஸ் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.

100 ஓவர்கள் கொண்ட போட்டியின் ஆரம்ப போட்டிகள் இன்று நடைபெறுவதுடன் இறுதிப் போட்டி நாளை  நடைபெறவுள்ளது.