போதைப்பொருள் தொடர்பான தேடுதல்களில் 981 பேர் கைது
இராணுவ புலனாய்வு தகவல்களுக்கமைய 2022ஆம் ஆண்டு பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படை மேற்கொண்ட போதைப்பொருள் தொடர்பான தேடுதல்களின் போது 981 பேர் கைதுசெய்யப்பட்டடுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
இதன்போது, 717 கிலோ கிராம் கேரள கஞ்சாவும், 2 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 138 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.