‘பும்மா’ என்ற போதைப் பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் வைத்து போதைப் பொருளுடன், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ள போதைப் பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவருமான ‘பும்மா’ என்ற ஸ்டேன்லி கெனட் பெர்னாண்டோவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான குறித்த சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொட்டாஞ்சேனை – கல்பொத்த பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, போலி இலக்க தகடுடனான மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.