இலங்கைக்கு உலக வங்கியின் பிரதித் தலைவர் விஜயம்
இலங்கைக்கு உலக வங்கியின் பிரதித் தலைவர் ஒருவர் நாளை சனிக்கிழமை விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறப்படும் வரையில், சுகாதார சேவையை உகந்த மட்டத்தில் பேணுவதற்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவினை அறிந்து கொள்வதே அவரது விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதித் தலைவர் மாரவில வைத்தியசாலையின் செயற்பாடுகளையும் அவதானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.